திப்பிலி(கோழையறுக்கி)
திப்பிலி பொடியை மூவிரல் அளவும் ,கம்மாறு வெற்றிலைச்சாறும்,தேனும்
கலந்து உட்கொள்ள கோழை ,இருமல்,சுரம் தீரும்..
திப்பிலி பொடியை தேனில் குழைத்து ஒரு மாதம் சாப்பிடத் தேமல் நீங்கு...
பேய் மருட்டி-பெருந்தும்பை
இலை கஷாயத்தை வாந்திபேதி,சுரம்,இருமலுக்கு கொடுக்கலாம்...இலைச்சாற்றை "பல் முளைக்கும் போது ஏற்படும் பேதிக்கு உள்ளுக்கு கொடுக்கலாம்.."
சுரத்தில் ஆவிபிடிக்கவும் பயன்படுத்தலாம்
..
சிறு குறிஞ்சான்(சக்கரைக் கொல்லி)
இதன் இலைகளை மென்று தின்றுவிட்டு பின் இனிப்பு பொருட்களை சாப்பிட்டால் அதன் சுவையிராது...கைப்பு சுவையும் தெரியாது..
சுரத்திற்கும்,அக்கரத்திற்கும்(வாயிலுண்டாகும் புண்) நல்லது...
சுரத்திற்கு இதன் இலையை குடி நீரிட்டு கொடுக்கலாம்..
இலையை விளக்கெண்ணையில் வதக்கி நெறிக்கட்டிகளுக்கு வைத்து கட்டலாம்...



Nandri
ReplyDelete😊
Delete