Wikipedia

Search results

Friday, 18 March 2016

ஒரு வகை தசை விறைப்பு நோய்-பொட்டுலிசம்




இது ஒரு கொடிய நோயாகும்.இவை கிளாஸ்டிரிடியம் பொட்டுலிசம் என்ற பாக்டீரியாவில் ஏற்படுகிறது.இவை மிக மோசமான உணவு நச்சேற்றத்தை ஏற்படுத்துகிறது. பொட்டுலிசம் என்றால் லத்தின் மொழியில் சாசேஜ் என்று பெயர்.இவை ஒழுங்காக சமைக்கப்படாத உணவுகளின் மூலம் நச்சேற்றத்தை ஏற்படுத்துகிறது.இந்த பாக்டீரியா மண்,விலங்குகளின் கழிவுகள்,காய்கறிகளில்,பதப்படுத்தப்பட்ட புட்டிகளில் அடைக்கப்பட்ட உணவுப்பொருட்களில் (tin foods ,cane foods which is preserved ),இறைச்சியில் ஒட்டுண்ணியாக காணப்படுகிறது.இந்த பாக்டீரியாவின் நச்சுப்பொருள் உயிரிகளைத் தாக்குவதற்கு முன்பே (preformed toxin) தயாராகிவிடுகிறது.இது மூன்று விதத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
1.உணவின் மூலம் பரவும் பொட்டுலிசம்
2.குழந்தைகளுக்கு வரும் பொட்டுலிசம்
3.புண்கள் பொட்டுலிசம்
1.உணவின் மூலம் பரவும் பொட்டுலிசம்:
சுகாதாரமற்ற ,நங்கு சமைக்காத உணவுகளில் இந்த பாக்டீரியா ஏற்படுத்துகிற நச்சின் மூலம் பரவுகிறது.இவை பெரும்பாலும் பதப்படுத்தப்பட்ட புட்டிகளில் அடைக்கப்பட்ட உணவுப்பொருட்களில் (tin foods ,canned foods which is preserved ),இறைச்சி,காய்கறிகளில் காணப்படுகிறது. இந்த பாக்டீரியா தொற்று உணவுகளில் இருந்தால் அவற்றைத் திறக்கும்போதே  அழுகிய நாற்றத்துடன்,நுரை நுரையாக கெட்டுப்போகி காணப்படும்.இந்த உணவை அறவே நீக்க வேண்டும்.ஆனால் சிலசமயம் இந்த பாக்டீரியா தொற்றுள்ள உணவு சாதரணமாகவே காணப்படும்.சுவையிலும் எந்த மாற்றமும் காணப்படாது.
இதன் அறிகுறி, இந்த பாக்டீரியா தொற்று உணவு உண்ட 12-36 மணி நேரங்களில் தொடங்கும்.வாந்தி,தாகம்,மலச்சிக்கல்,முழுங்க,பேச,சுவாசிக்க சிரமப்படுதல்,கண்களில்  அரை குறை முடக்குவாதம்(ocular paresis),ஆகியவை அறிகுறிகளாகும்.வயிற்றுப்போக்கு இந்த தொற்றுக்கு அறிகுறியல்ல.இதன் இறப்பு விகிதம் 25-70 % .சுவாச செயலிழப்பு ஏற்பட்டு இறப்பு நிகழ்கிறது
2.குழந்தைகளுக்கு வரும் பொட்டுலிசம்:
6 மாதத்திற்கு கீழ் உள்ள குழந்தைகள் பாதிக்கப்டுகின்றனர்.இந்த பாக்டீரியாவின் ஸ்போர் உள்ள உணவை உட்கொள்ளுவதன் மூலம் ஏற்படுகிறது.தேன் மூலம்தான் ஏற்படுகிறது.இதன் மூலம் மலச்சிக்கல்,சோம்பல்,மூளை வாதம்(cranial palsy),பால் குடிக்க முடியாமை,உடல் நிறம் மங்கிப்போதல் (floppy baby syndrome),மூச்சு விட சிரமம் ஏற்படுகிறது.சில சமயம் இறப்பையும் ஏற்படுத்டுகிறது.
3.புண்கள் பொட்டுலிசம்;
    இது அரிதாக ஏற்படும் புண்கள் தொற்றாகும்.இந்த பாக்டீரியாவின் நச்சு,புண்கள் மூலம் இரத்தத்தில் கலந்து, முழுங்க,பேச,சுவாசிக்க சிரமப்படுதல்,கண்களில்  அரை குறை முடக்குவாதம்(ocular paresis) ஆகிய அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.
தடுப்பு மருந்து:
பதப்படுத்தப்பட்ட புட்டிகளில் அடைக்கப்பட்ட உணவுப்பொருட்களை (tin foods ,canned foods which is preserved ) தவிர்க்க வேன்டும்.ஆய்வகத்தில் பணிபுரிபவர்கள் டாக்சாய்டு போட்டுகொள்ளலாம்.
சித்த மருந்துவம்:
1.பஞ்ச தீபக்கனி
2.திரிகடுகு
அல்லோபதி:
1.Supportive therapy with proper respiration
2.Antitoxin
3.Polyvalent antiserum (A B E)
  மருந்துகள் முழு நிவாரணத்திற்கு இல்லை.வாழ் நாளை நீட்டிக்கத்தான்.

  பொட்டுலிசம் ஒரு கொடிய நச்சுப்பொருள்.இது 1 மைக்ரோ கிராம் ஒரு மனிதனயே கொல்லும் திறன் கொண்டது. 3கிராம்,இந்த மொத்த உலகத்தையும் அழிக்கும் திறன் கொண்டது.
இந்த நச்சு நமது நரம்பு மண்டலத்தை (neuro toxin) மெதுவாகத்தாக்கி சில மணி நேரங்களில் இறப்பை ஏற்படுத்துகிறது. இந்த நச்சு,இரண்டு நரம்பு தசை இணையும் இடத்தில் அசிட்டைல்கோலைன் என்னும் வேதிப்பொருளை அதன் வாங்கிகளுடன்(receptor) இணையவிடாமலோ அல்லது அதன் உற்பத்தியைத் தடுத்தோ தசை இயக்கத்தைத் தடை செய்து,தசை விறைப்புத்தன்மையை ஏற்படுத்தி,சுவாச செயலிழப்பை ஏற்படுத்தி இறப்பை ஏற்படுத்துகிறது.
இந்த நச்சு,உயிர்க்கொல்லும் ஆயுதமாக (bioweapon) சில நாடுகள் பயன்படுத்தியுள்ளது.
அனைவரையும் அன்பு செய்து,அறிவியலை ஆக்கத்திற்கு மட்டும் பயன்படுத்தி பயன்பெறுவோம்.

Wednesday, 16 March 2016

வெட்டை நோய்(கொனோரியா)

இது பாலுறவின் மூலம் பரவக்கூடிய ஒரு கொடிய நோயாகும். நிசெரியா கொனோரியா என்ற பாக்டீரியாவின் மூலம் ஏற்படுகிறது.ஆண்கள் மற்றும் பெண்களுக்கும் சிறுநீர் குழாயில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.



ஆண்களுக்கு:
இந்த நோய் விந்துப்பை மற்றும் விந்து கோசத்திற்கு பரவுகிறது.ஆண் உறுப்பிலிருந்துமஞ்சள் நிற திரவம் வெளிப்படுகிறது.சிகிச்சை எடுக்காமல் விட்டால்,நோய் ஏற்பட்டுள்ள இடத்தில் உள்ள இணைப்புத்திசு தசை அழற்சி(fibrosis),சிறுநீர் குழாய் குறுகலாய் மாறி தசை இறுக்கியது(stricture) போல் மாறிவிடும்.
பெண்களுக்கு:
கருப்பை வாயிலில்தான் நோய்த்தொற்று தொடங்குகிறது.பின் அங்கிருந்து பார்த்தோலியன் சுரப்பி ,கருப்பை,பலோப்பியன் குழாய்,அண்டப்பையை தாக்குகிறது.இந்த பாக்டீரியத்தொற்று பெண்களுக்கு எந்தவொரு அறிகுறியையும் தோற்றுவிப்பதில்லை.இந்த பாக்டீரியா இரத்தம் மூலம் பரவி இதய உட்சவ்வு அழற்சி(endocarditis),சீழ்களுடன் கூடிய மூட்டு அழற்சியை ஏற்படுத்துகிறது.
வெட்டை நோய் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு சுகப்பிரசவம் நடந்தால் பிறக்கும் குழந்தைக்கு கண் தொற்று(opthalmia Neonatrum) ஏற்படும்.
வயதிற்கு வந்த பெண்ணின் பிறப்புறுப்பில் சுரக்கும் திரவம் அமிலத்தன்மை கொண்டுள்ளதால் அவை இந்த பாக்டீரியாத் தொற்றைத் தடுக்கிறது.ஆனால் பருவமடையாத பெண்களின் பிறப்புறுப்பின் வெளிப்பகுதியைத்தாக்குகிறது (gonococcal vulvavaginitis)
சிகிச்சை முறை:
           1.சித்த மருத்துவத்தில் குழந்தை பிறந்தவுடன் கண்ணில் ஏற்படும் தொற்றைத் தவிர்க்க படிகார நீர் கொண்டு துடைக்கப்படுகிறது.                                            2.இரசம் வங்கம் சேர்ந்த மருந்துகள் வழங்கலாம்.
             3.கந்தகம்.,பஞ்ச பாஷாண செந்தூரம்.,நாகம் பயன்படுத்தப்படுகிறது.
அல்லோபதி:
          1.Pencilin
          2.Deoxycholine
(வாழும் காலத்தை அதிகரிக்க மட்டுமே)
குழந்தையை ஆப்ரேசஷன் மூலம் எடுத்தால் இந்த பாக்டீரியவினால்ஏற்படும் கண் தொற்றினைத்(opthalmia neonatrum) தடுக்கலாம்.
தடுக்கும் முறை:
          1.இந்நோயிக்கு தடுப்பு மருந்து ஏதுமில்லை.
           2.தவறான உறவுமுறைகளைத் தவிர்த்து “ஒருவனுக்கு ஒருத்தி” என்றா வாழ்க்கை முறையைப் பேண வேண்டும்.
             3.நோய்ப்பற்றிய கல்வி முறையினை கற்பிக்க வேண்டும்.
குழந்தைகள்,சிறுவர் சிறுமிகளை உடலுறவுக்கு கட்டாயபடுத்தலையும்,வதைப்படுத்தலையும்,கற்ப்பழித்தலையும் தவிர்த்து,மது ,மாதுவிற்கு அடிமையாகாமல் வளமான, நலமான எதிர்காலத்தைக் குழந்தைகளுக்கு தந்து,நோயற்ற சமுதாயத்தை உருவாக்குவோம்.

டைஃபாய்டு மேரி




1.டைஃபாய்டு நோய் சால்மோனெல்லா டைஃபி என்ற பாக்டீரியா மூலம் பரவுகிறது..


2.இது சுகாதராமற்ற உணவு மற்றும் நீரை அருந்துவது மூலம் ஏற்படுகிறது.
நாம் சுகாதராமற்ற நிலையில் உள்ள உணவு மற்றும் நீரை எடுத்துக் கொண்ட 7 முதல் 14 நாட்களில் நோய் தொடங்குகிறது.

3.கேரியர்(carrier)களின் மூலமாகவும் பரவுகிறது. கேரியர் என்பவர்கள்  நோய்க்கு காரணமான பாக்டீரியாவை சுமந்து கொண்டும்,ஆனால் அவர்களுக்கு அந்த பாக்டீரியாவால் எந்த வித பாதிப்பும் இல்லாமல் இருப்பவர்கள்.

4.அமெரிக்காவில் மேரி(1869-1938) என்ற சமைக்கும் தொழிலில் உள்ள பெண்மணி கிட்டத்தட்ட 15 வருடங்கள் கேரியராக வாழ்ந்துள்ளார்.அந்த 15 வருடங்களில் அவர் சமைத்த உணவை உண்ட அனைவரும் டைஃபாய்டு நோய் தாக்கியுள்ளது.அதனால் அவர் பெயரே டைஃபாய்டு மேரி என்றானது.கேரியராக வாழ்ந்தவர்களில் முதலில் கண்டறியப்பட்டவர்.




சிகிச்சை:
சித்த மருத்துவம்:எட்டி சூரணம்
அல்லோபதி:chloramphenicol,Amoxylin,ampicillin,furazolidone and cotrimoxazole (cholecystectomy-chronic carriers)
தடுப்பு மருந்துகள்:TAB vaccine,live oral (Ty 21a) typhoid vaccine



Lec. By:Dr.Angeline
Ref. By:Dr.Nikil niva

Tuesday, 15 March 2016

காலரா





     காலரா,விப்ரியோ காலரே என்ற பாக்டீரியாவினால் பரவுகிறது.இது சுகாதாரமற்ற நீர் அருந்துவதின் மூலமாகவும்,உணவு உண்பதன் மூலமாகவும் பரவுகிறது.இது உவர்நீரில் அதிகம் வாழாது(salt percentage<7%).அதனால்,மழைப்பெய்யும் காலங்களில் ,கடலில் உள்ள உவர் நீரின் உப்புத்தன்மையின் செறிவு குறைவதால் பாக்டீரியாக்கள் அங்கு வள்ர்ந்து,மீன்கள் மற்றும் கடல் வாழ் உயிரிகளுக்கும் அந்த பாக்டீரியவின் தொற்று ஏற்படுகிறது.ஏனெனில் அங்கு வளரும் மீன்கள் மற்றும் கடல் வாழ் உயிரிகளை உண்பதன் மூலம் காலரா நோய் மனிதர்களுக்கும் பரவுகிறது.அதனால் மழைக்காலங்களில் மீன் முதலிய உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.கங்கை நதியில்(புனித நதி(இப்பொழுது மிகவும் மோசமான நிலையில் உள்ளது)) விப்ரியோ காலரே வளருவதில்லை.ஏனெனில் இதில் விப்ரியோ காலரே பாஜ்(bacteriophage is a virus which kills the bacteria) உள்ளது.
     இந்த பாக்டீரியா தொற்று ஏற்படுவதால் தீவிர வயிற்றுப்போக்கை ஏற்படுத்துகிறது.நமது வயிற்றில் உள்ள இயற்கையான பாதுகாப்பிகளான அமிலங்கள்(HCL) மற்றும் மற்றைய செரிமான நொதிகளால்(digestive enzyme) கூட இந்த பாக்டீரியாக்களை அழிக்க முடியாது.இந்த பாக்டீரியா உடலில் உள்ள நீர் அனைத்தையும் குடலிற்கு கொண்டு வந்து தீவிரமான அரிசி கலந்த நீர் போன்ற வயிற்றுப்போக்கினை எந்த வலியுமின்றி ஏற்படுத்துகிறது.உடலில் உள்ள பொட்டாசியம் முழுவதும் வெளியேறுவதால் தசைப்பிடிப்பு(muscle cramps) ஏற்படுகிறது.
     இந்த நோய் ஏற்பட்டு,எந்த விதமான சிகிச்சையும் எடுக்காமலிருந்தால்,உடலில் உள்ள நீர் அனைத்தும் வயிற்றுப்போக்குடன் வெளியேறிய பின்பு இரத்தத்தில் உள்ள பிளாஸ்மா(plasma cells) குடலிற்கு சென்றுவிடுகிறது.அதனால் இரத்தத்தின் செறிவு (blood concentration increased) அதிகமாகி ,உடலில் உள்ள உறுப்புகளுக்கு இரத்த ஓட்டம் குறைந்து,அதனால் உறுப்புகளுக்கு செல்லும் பிராணவாயு(oxygen) தடைப்படுவதால் இரத்த அளவு பற்றாக்குறையால் அதிர்ச்சி(HYPOVOLEMIC SHOCK)  ஏற்படுகிறது.அதனால் சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு இறப்பு நிகழ்கிறது.
இந்த நோய் 1817-1923 வரை அதிக மக்கள் இந்த நோயினால் இறந்துள்ளனர்(6 PANDAMICS).இந்த நோய் கல்கட்டாவில் மார்ச் முதல் மே மாதம்(MARCH-MAY) வரையிலும்,பங்களாதேஷில் நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரையிலும் அதிகமாக பரவுகிறது.காலநிலை மாற்றத்தால் ஏற்படுகிறது
தடுக்கும் முறை:
“வருமுன் காப்பதே சிறந்தது”
1).மழைக்காலங்களில் மீன் முதலிய கடல் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
2).கொதிக்க வைத்த நீரினைப் பருக வேண்டும்.
3).நன்கு சமைத்த உணவுகளை சாப்பிட வேண்டும்.
சிகிச்சை முறை:
1).சர்க்கரை மற்றும் உப்பை எலுமிச்சை சாறு கலந்து கொடுக்கலாம்.
அல்லோபதி:
1).ORAL REHDRATION THERAPY- WATER AND ELECTROLYTES THROUGH INTERAVENOUS FLUID
2.ANTIBIOTICS(IT IS SECONDARY)-TERTRACYCLINE
தடுப்பு மருந்து:
1).உணவே மருந்து-தினம் ஒரு எலுமிச்சை பழத்தை உணவில் எடுத்துக் கொள்ளலாம்.
2.KILLED PAREANTERAL VACCINE-இவை 3-6 மாதங்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது.
3).KILLED ORAL VACCINE-B SUBUNIT WHOLE CELL VACCINE(UNDERGONE FIELD TRIAL IN BANGLADESH)-இது நோயிலிருந்து 85% பாதுகாப்பை முதல் வருடமும்,60% பாதுகாப்பை அடுத்த வருடமும் என்று இரண்டு வருடங்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது.
4).LIVE ORAL VACCINE-இவை மறுச்சேர்க்கை டி,என்.ஏ தொழில் நுட்பத்தின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.