காலரா,விப்ரியோ காலரே என்ற பாக்டீரியாவினால் பரவுகிறது.இது சுகாதாரமற்ற நீர் அருந்துவதின் மூலமாகவும்,உணவு உண்பதன் மூலமாகவும் பரவுகிறது.இது உவர்நீரில் அதிகம் வாழாது(salt percentage<7%).அதனால்,மழைப்பெய்யும் காலங்களில் ,கடலில் உள்ள உவர் நீரின் உப்புத்தன்மையின் செறிவு குறைவதால் பாக்டீரியாக்கள் அங்கு வள்ர்ந்து,மீன்கள் மற்றும் கடல் வாழ் உயிரிகளுக்கும் அந்த பாக்டீரியவின் தொற்று ஏற்படுகிறது.ஏனெனில் அங்கு வளரும் மீன்கள் மற்றும் கடல் வாழ் உயிரிகளை உண்பதன் மூலம் காலரா நோய் மனிதர்களுக்கும் பரவுகிறது.அதனால் மழைக்காலங்களில் மீன் முதலிய உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.கங்கை நதியில்(புனித நதி(இப்பொழுது மிகவும் மோசமான நிலையில் உள்ளது)) விப்ரியோ காலரே வளருவதில்லை.ஏனெனில் இதில் விப்ரியோ காலரே பாஜ்(bacteriophage is a virus which kills the bacteria) உள்ளது.
இந்த
பாக்டீரியா தொற்று ஏற்படுவதால் தீவிர வயிற்றுப்போக்கை ஏற்படுத்துகிறது.நமது
வயிற்றில் உள்ள இயற்கையான பாதுகாப்பிகளான அமிலங்கள்(HCL) மற்றும் மற்றைய செரிமான நொதிகளால்(digestive
enzyme) கூட இந்த பாக்டீரியாக்களை அழிக்க
முடியாது.இந்த பாக்டீரியா உடலில் உள்ள நீர் அனைத்தையும் குடலிற்கு கொண்டு வந்து
தீவிரமான அரிசி கலந்த நீர் போன்ற வயிற்றுப்போக்கினை எந்த வலியுமின்றி ஏற்படுத்துகிறது.உடலில்
உள்ள பொட்டாசியம் முழுவதும் வெளியேறுவதால் தசைப்பிடிப்பு(muscle
cramps) ஏற்படுகிறது.
இந்த நோய் ஏற்பட்டு,எந்த
விதமான சிகிச்சையும் எடுக்காமலிருந்தால்,உடலில் உள்ள நீர் அனைத்தும் வயிற்றுப்போக்குடன்
வெளியேறிய பின்பு இரத்தத்தில் உள்ள பிளாஸ்மா(plasma
cells) குடலிற்கு சென்றுவிடுகிறது.அதனால் இரத்தத்தின்
செறிவு (blood concentration increased) அதிகமாகி
,உடலில் உள்ள உறுப்புகளுக்கு இரத்த ஓட்டம் குறைந்து,அதனால் உறுப்புகளுக்கு
செல்லும் பிராணவாயு(oxygen)
தடைப்படுவதால் இரத்த அளவு பற்றாக்குறையால் அதிர்ச்சி(HYPOVOLEMIC
SHOCK) ஏற்படுகிறது.அதனால் சிறுநீரக
செயலிழப்பு ஏற்பட்டு இறப்பு நிகழ்கிறது.
இந்த நோய் 1817-1923 வரை அதிக மக்கள் இந்த நோயினால் இறந்துள்ளனர்(6 PANDAMICS).இந்த
நோய் கல்கட்டாவில் மார்ச் முதல் மே
மாதம்(MARCH-MAY) வரையிலும்,பங்களாதேஷில் நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரையிலும் அதிகமாக பரவுகிறது.காலநிலை மாற்றத்தால் ஏற்படுகிறது
தடுக்கும் முறை:
“வருமுன் காப்பதே சிறந்தது”
1).மழைக்காலங்களில் மீன் முதலிய கடல் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
2).கொதிக்க வைத்த நீரினைப் பருக வேண்டும்.
3).நன்கு சமைத்த உணவுகளை சாப்பிட வேண்டும்.
சிகிச்சை முறை:
1).சர்க்கரை மற்றும் உப்பை எலுமிச்சை சாறு கலந்து கொடுக்கலாம்.
அல்லோபதி:
1).ORAL REHDRATION THERAPY- WATER AND ELECTROLYTES THROUGH INTERAVENOUS
FLUID
2.ANTIBIOTICS(IT IS SECONDARY)-TERTRACYCLINE
தடுப்பு மருந்து:
1).உணவே மருந்து-தினம் ஒரு எலுமிச்சை பழத்தை உணவில் எடுத்துக்
கொள்ளலாம்.
2.KILLED PAREANTERAL VACCINE-இவை 3-6 மாதங்களுக்கு பாதுகாப்பு
அளிக்கிறது.
3).KILLED ORAL VACCINE-B SUBUNIT WHOLE CELL VACCINE(UNDERGONE
FIELD TRIAL IN BANGLADESH)-இது நோயிலிருந்து 85% பாதுகாப்பை முதல் வருடமும்,60% பாதுகாப்பை
அடுத்த வருடமும் என்று இரண்டு வருடங்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது.
4).LIVE ORAL VACCINE-இவை மறுச்சேர்க்கை டி,என்.ஏ தொழில் நுட்பத்தின் மூலம்
கண்டுபிடிக்கப்பட்டது.


No comments:
Post a Comment