Wikipedia

Search results

Wednesday, 16 March 2016

வெட்டை நோய்(கொனோரியா)

இது பாலுறவின் மூலம் பரவக்கூடிய ஒரு கொடிய நோயாகும். நிசெரியா கொனோரியா என்ற பாக்டீரியாவின் மூலம் ஏற்படுகிறது.ஆண்கள் மற்றும் பெண்களுக்கும் சிறுநீர் குழாயில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.



ஆண்களுக்கு:
இந்த நோய் விந்துப்பை மற்றும் விந்து கோசத்திற்கு பரவுகிறது.ஆண் உறுப்பிலிருந்துமஞ்சள் நிற திரவம் வெளிப்படுகிறது.சிகிச்சை எடுக்காமல் விட்டால்,நோய் ஏற்பட்டுள்ள இடத்தில் உள்ள இணைப்புத்திசு தசை அழற்சி(fibrosis),சிறுநீர் குழாய் குறுகலாய் மாறி தசை இறுக்கியது(stricture) போல் மாறிவிடும்.
பெண்களுக்கு:
கருப்பை வாயிலில்தான் நோய்த்தொற்று தொடங்குகிறது.பின் அங்கிருந்து பார்த்தோலியன் சுரப்பி ,கருப்பை,பலோப்பியன் குழாய்,அண்டப்பையை தாக்குகிறது.இந்த பாக்டீரியத்தொற்று பெண்களுக்கு எந்தவொரு அறிகுறியையும் தோற்றுவிப்பதில்லை.இந்த பாக்டீரியா இரத்தம் மூலம் பரவி இதய உட்சவ்வு அழற்சி(endocarditis),சீழ்களுடன் கூடிய மூட்டு அழற்சியை ஏற்படுத்துகிறது.
வெட்டை நோய் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு சுகப்பிரசவம் நடந்தால் பிறக்கும் குழந்தைக்கு கண் தொற்று(opthalmia Neonatrum) ஏற்படும்.
வயதிற்கு வந்த பெண்ணின் பிறப்புறுப்பில் சுரக்கும் திரவம் அமிலத்தன்மை கொண்டுள்ளதால் அவை இந்த பாக்டீரியாத் தொற்றைத் தடுக்கிறது.ஆனால் பருவமடையாத பெண்களின் பிறப்புறுப்பின் வெளிப்பகுதியைத்தாக்குகிறது (gonococcal vulvavaginitis)
சிகிச்சை முறை:
           1.சித்த மருத்துவத்தில் குழந்தை பிறந்தவுடன் கண்ணில் ஏற்படும் தொற்றைத் தவிர்க்க படிகார நீர் கொண்டு துடைக்கப்படுகிறது.                                            2.இரசம் வங்கம் சேர்ந்த மருந்துகள் வழங்கலாம்.
             3.கந்தகம்.,பஞ்ச பாஷாண செந்தூரம்.,நாகம் பயன்படுத்தப்படுகிறது.
அல்லோபதி:
          1.Pencilin
          2.Deoxycholine
(வாழும் காலத்தை அதிகரிக்க மட்டுமே)
குழந்தையை ஆப்ரேசஷன் மூலம் எடுத்தால் இந்த பாக்டீரியவினால்ஏற்படும் கண் தொற்றினைத்(opthalmia neonatrum) தடுக்கலாம்.
தடுக்கும் முறை:
          1.இந்நோயிக்கு தடுப்பு மருந்து ஏதுமில்லை.
           2.தவறான உறவுமுறைகளைத் தவிர்த்து “ஒருவனுக்கு ஒருத்தி” என்றா வாழ்க்கை முறையைப் பேண வேண்டும்.
             3.நோய்ப்பற்றிய கல்வி முறையினை கற்பிக்க வேண்டும்.
குழந்தைகள்,சிறுவர் சிறுமிகளை உடலுறவுக்கு கட்டாயபடுத்தலையும்,வதைப்படுத்தலையும்,கற்ப்பழித்தலையும் தவிர்த்து,மது ,மாதுவிற்கு அடிமையாகாமல் வளமான, நலமான எதிர்காலத்தைக் குழந்தைகளுக்கு தந்து,நோயற்ற சமுதாயத்தை உருவாக்குவோம்.

No comments:

Post a Comment