Wikipedia

Search results

Thursday, 13 August 2020

ஆடி மாதமும் ,சித்த மருத்துவமும்

ஆக ஆடி மாதம் ,கோடையின் முடிவு,மழையின் தொடக்கம்..(காலம் மாறி போச்சு கண்ணுனு வசனமெல்லாம் பேசக்கூடாது..பாடத்த கவனிக்கனும்..)

ஆடி காத்துல அம்மியும் நகரும்..
ஆடிப்பட்டம் தேடி விதை…(பழமொழி..இருக்கட்டும்).

இந்த மாசத்துல வாயு(காற்று)வின் சீற்றம், பித்தத்தின் வளர்ச்சி இருக்கும்..(சித்த மருத்துவ நூல்கள் சொல்லுது குமாரு…)

இப்போ சுவை பார்ப்போம்..

அனைத்தும் பஞ்சபூதமயமாதுதானே…

மண்,நீர் ,நெருப்பு,காற்று,ஆகாயம் அல்லவோ பஞ்சபூதங்கள்…(அதுலாம் எங்களுக்கே தெரியும்…மேல சொல்லுங்கிறிங்களா)..

நம்ம சாப்பிடுற உணவுகளும் பஞ்சபூதமயம்,
அறு சுவைகளில்,ஒவ்வொரு சுவையும் ரெண்டு பஞ்சபூதம் இணைந்து உருவாகியிருக்கு….(எப்பா…புரிஞ்சுதா)…

அதாவது,

இனிப்பு – மண்+ நீர்

புளிப்பு- நெருப்பு + மண்

உப்பு – நீர் + நெருப்பு

கசப்பு – ஆகாயம் + காற்று

காரம் – நெருப்பு + காற்று

துவர்ப்பு – நிலம் + காற்று

இந்த அமைப்புலதான் இருக்கு…

ஆடி மாசம் முழுக்க காற்றோட(வாயுவோட) சீற்றம் அதிகம்..அத நம்மளோட உடம்புல தன்னிலைப்படுத்தனும்..(படுத்தலனா,வாத சம்பந்த பிரச்சனை வரும் ..பாத்துக்கோங்க..)

அதுக்கு என்னா பண்ணணும்?…

ம்ம்..காத்து பூதம் இல்லாத சுவைகள சாப்டனும்..

இப்ப காற்று இல்லாத சுவைகள் என்னன்ன

இனிப்பு புளிப்பு உப்பு இந்த சுவைகளை அதிக படுத்திக்கிட்டு,மற்றத கம்மி படுத்தி சாப்டனும்…

அம்புட்டுதான்…

ஆடி மாச விஷேஷ உணவுகள் ,அதிகமாக இந்த சுவைகள அடிப்படையா கொண்டு தான் இருக்கும்…
யோசிங்க மக்களே…

இதுல எங்க மருத்துவம் வருதுன்னு கேக்கலாம்…
End card-ae இங்கதான்…
உணவே மருந்து..மருந்தே உணவு ..

Monday, 13 January 2020

புற்றுநோய்க்கு மணத்தக்காளி?

மணத்தக்காளிக்கீரை
மணத்தக்காளி செடி (14/1/2020-10.19 am)


Solanum nigrum..

இதுக்கு காகமாசி,விடைகந்தம்,வாயசம் நிறைய பேரு இருக்கு...

நாக்குப்புண்,வாய்வேக்காடு ,வயிற்றுப்புண்களை தீர்க்கும்.
சளி இருமல் குணமாகும்..
உடம்புக்கு நல்ல நோய் எதிர்ப்பாற்றல வழங்கும்..

காகமாசி தைலம் இருமல் இரைப்புக்கு நல்ல மருந்து...


https://www.researchgate.net/publication/50865162_Solanum_nigrum_Current_Perspectives_on_Therapeutic_Properties


இதில் கிளைக்கோ ஆல்கலாய்ட்கள்,கிளைக்கோ புரதங்கள்,பாலி சாக்கரைடுகள்சொலனின்,கபியீக் அமிலம்,காலிக் அமிலம்,கேட்டசின்,எபிகேட்டசின்,புரோட்டோ கேட்டசுயிக் அமிலம்,ருடின்,நரின்ஜெனின் போன்றவைகள் உள்ளன.

இவற்றிற்கு புற்றுசெல்களை அழிக்கும் திறன் உள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்..

இவற்றிள் உள்ள பழுக்காத காய்களுக்கு விஷத்தன்மை உள்ளதாகவும் கண்டறிந்துள்ளானர்...
பழுத்த பழங்களை உண்ணலாம்.

கீரையை சமைத்து உண்பதன் மூலம் சத்துக்களைப் பெறலாம்.

உணவு:

Sunday, 8 July 2018

Hormones...are very dangerous...

மன அழுத்தம் எப்டி நம்ம உடம்புக்கு நோய் நிலைகளை உண்டக்குது?

மன அழுத்தத்துல இருக்கும் போது நம்மளோட உடம்புல cortisol,adrenaline இது போல hormone ங்களோட சுரப்பு இருக்கும்..


இது பொதுவா ரொம்ப பயம் இருக்கும்போதோ,ஒரு நாய் நம்மள தொரத்தும் போதோ அவங்ககிட்ட ஒருந்து காப்பாத்திக்க தொல பொல தொல பொலன்னு ஓடுறதுக்கு ஒரு அசுர வேகத்த குடுக்குறத்துக்கு காரணமே அந்த hormones தான்...
இப்டி பட்ட ஹார்மோன்..நம்ம உடம்புல அடிக்கடி சரந்து நம்ம இரத்தத்துல  கலந்து ,நோய் எதிர்ப்பு சக்திய தர செல்கள செயலிலக்க செய்றதுனால,மன அழுத்ததுல இருக்கவங்க அதிகமான நோய்க்கு உள்ளாகுறாங்க...


பரம்பரையாகவோ,நோய் தொற்றின் காரணமாகவோ,சுய செல்களை அழிக்கும் காரணிகளாலோ,சுத்தமான சுற்றுசூழல் இல்லாத காரணத்தினாலோ,ஊட்டச்சத்து குறைவுபாடினாலோ,இல்லை உணவே கிடைக்காத்தாலோ...உண்டான நோய்களெல்லாம் மன அழுத்தம் என்ற காரணத்தினாலேயும் உண்டாகின்றன...

சோ அண்ட் சோ ,மனச அமைதியா வச்சுக்கோங்க...(நீ என்னம்ம ஈசியா சொல்லிபுட்டன்னு சொல்லாதிங்க)

முடிஞ்ச அளவு,சைட்டுகளை சைட்டுகளோடு நிப்பாட்டி விட்டு காதலுக்கு கொண்டு செல்லாமலும்,டீச்சர் திட்டுனத வகுப்பறைலயே விட்டுட்டு வந்தும்,புருஷன் பொண்டாட்டி சந்தேகத்துக்கு இடமில்லாம நடந்துகிட்டாலும்,நீங்கள் நினைப்பதாகவே அடுத்தவர்கள் இருக்க வேண்டும் என்று நினையாமலும்,கொஞ்ச கற்பனா சக்தியை அடக்கி கொண்டாலும்

சரியான நேரத்துல சாப்ட்டு,மொபைல் நோண்டாம நேரத்துக்கு தூக்கம்,யோகா,தியானம் போன்றவைகளினால் ஓரளவுக்கு மன அழுத்ததிலிருந்து விடைபெறலாம்..

Sunday, 1 July 2018

மூன்று மூலிகைகள் மற்றும் பயன்கள்

திப்பிலி(கோழையறுக்கி)




திப்பிலி பொடியை மூவிரல் அளவும் ,கம்மாறு வெற்றிலைச்சாறும்,தேனும்
கலந்து உட்கொள்ள கோழை ,இருமல்,சுரம் தீரும்..
திப்பிலி பொடியை தேனில் குழைத்து ஒரு மாதம் சாப்பிடத் தேமல் நீங்கு...


பேய் மருட்டி-பெருந்தும்பை


இலை கஷாயத்தை வாந்திபேதி,சுரம்,இருமலுக்கு கொடுக்கலாம்...இலைச்சாற்றை "பல் முளைக்கும் போது ஏற்படும் பேதிக்கு உள்ளுக்கு  கொடுக்கலாம்.."

சுரத்தில் ஆவிபிடிக்கவும் பயன்படுத்தலாம்
..

சிறு குறிஞ்சான்(சக்கரைக் கொல்லி)



இதன் இலைகளை மென்று தின்றுவிட்டு பின் இனிப்பு பொருட்களை சாப்பிட்டால் அதன் சுவையிராது...கைப்பு சுவையும் தெரியாது..

சுரத்திற்கும்,அக்கரத்திற்கும்(வாயிலுண்டாகும் புண்) நல்லது...

சுரத்திற்கு இதன் இலையை குடி நீரிட்டு கொடுக்கலாம்..

இலையை விளக்கெண்ணையில் வதக்கி நெறிக்கட்டிகளுக்கு வைத்து கட்டலாம்...

Thursday, 1 February 2018

ஆல்கஹால் முதல் ஆன்ட்ராய்டு வரை..

       நட்பு 👬என்பதால் ஒரே ஊசி கொண்டு குத்தி போதை ஏற்றிக்கொள்கிறாய்.....நோயையும் வாங்கிக் கொள்கிறாய்...உன் அன்பு மனைவிக்கும்💏ஆசைக்குழந்தைக்கும்👶👶🚼🚺🚹 பரிமாறுகிறாய்...உன் வம்சத்தையையே அழித்து விடுகிறாய்❌❌❌..
     ஆடி அடங்கிய பி்ன் வைத்தியம் பார்க்க வைத்தியம் பார்க்க மருத்துவ மனை ஏறி ஏறி இறங்குவாய்♿♿..உன் நரம்பெல்லாம் நாராய் போனபின்பு வைத்தியம் பார்த்து என்ன பலன்💦💦💦💦💦
       வயதை இழந்தப்பின் வருந்தியும் பலன் இல்லை🔊...உன் ஆன்மாவுக்கென்று அளிக்கப்பட்ட உடலை போதைக்கு அடிமையாக்கி அழிக்காதே...
   
      ஆயிரம் புத்திமதியெல்லாம் தேவையில்லை❎...உன் அரை நொடி சிந்தனை போதும்✅✅...

     
       உன் நண்பனை போதைக்கு அடிமையாகமல் பார்த்துக்கொள்🙏😿👬👫👬👭...விடுவிக்க முயற்சி செய்....
      உன் அறிவை மழுங்க வைக்கும் எந்த போதையும் வேண்டாம்🚫❎📵 ஆன்ராய்டு வரை......




#say_no_to_drugs🔊
#stop_transfer_HIV🔊
#B_A_MAN🔊
#B_A_WOMAN🔊

யோகமும் நலமும்

பதஞ்சலி அள்ளிக்கொடுத்த அருள் கொடையாம் ஆசனங்கள்...


உடம்பை வளர்த்தேன்..உயிர் வளர்த்தேனே-திருமூலர்...
உடலில் தான் உயிர் குடிக்கொண்டுள்ளது....
உடலை வளர்க்கும் முறைகளில் ஒன்றே  நம் ஆசனங்களும்...
மோடி ஒரு கேடி.. எது சொன்னாலும் தப்பாதான் இருக்கும்னு ஒரு நம்பிக்க நமக்குள்ள...சில நேரம் சிலத மட்டும் கொஞ்சம் ஒழுங்கா பண்ணாருனா அது யோகா தினம் தான்...
நம்ம முன்னோர்கள் நமக்காக  சொல்லிக்கொடுத்தது...



காலை எழுந்ததும் ஒட்டு மொத்த நாள் புத்துணர்ச்சிக்கும் சூரிய வணக்கம்....
அமைதி உணர்வை பெற பத்மாசன தியானம்..
அறிவை பெருக்கிக்கொள்ள வஜ்ராசன தியானம்...
மனதை ஒருங்கிணைக்க பர்வட்டாசனம்...
வயிற்றுப்பகுதியை சீராக்கும் யோகமுத்ரா மற்றும் தனுராசனம்...
இடுப்பையும் கால்களையும் சீராக்க பவன முத்தாசனம் மற்றும் உத்தானா பாதசனம்...
தலைப்பகுதிக்கு புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக அதிக இரத்தம் செல்ல சிரசானம் ,கலாசனம் மற்றும் லிங்க பீடாசனம்...


94 வயதிலும் யோகா செய்து நன்கு வாழும் ஞானம்மாள் பத்ம விபூஷண் விருதும் பெற்றார்

உடல் முழுதையும் மனம் முழுதையும் உற்சாக படுத்தும் புத்துணர்விக்கும் ஆசனங்கள் ஏராளம் ..
நீடுடி அன்புடன் வளமுடனும் உடல் நலத்துடன் வாழ்வோம்...




Tuesday, 27 June 2017

The dimple have pimple haan????

உண்மையிலேயே sight அடிச்சா pimples வருமா?...😱😱

ஆமாம்..வரும்🙋...
அது எப்டிப்பா அதானே...
பொண்ணுங்களுக்கும் பசங்களுக்கும் puberty stage வரைக்கும் sebaceous gland-ங்கிற (which secrete the oily substance called sebam) ஒன்னு செயல்படாமா இருக்கும்...
Puberty-க்கு அப்புறம்,oily face க்கு காரணமான அந்த sebaceous gland செயல்பட ஆரம்பிக்கும்...

Puberty-ல,பொதுவா பசங்களுக்கு sex hormone அதிகமா சுரக்கும்...உடனே நம்மாளு sebaceous gland சும்மா இருப்பாரா...அவரு வேலைய காட்ட ஆரம்பிச்சுருவாரு...அட அதான்பா pimples வர ஆரம்பிச்சுரும்...

அப்றம் என்ன ...அக்காவோட face cream,தங்கச்சியோட face wash அலைய வேண்டிய வேல வேற...

அதிகமா sight  அடிச்சா ,sex hormone அதிகமா சுரக்கும்..so,sebaceous gland அதோட வேளைய காட்டும்...pimples வரும் ..இது இயற்கை...

எப்போ sebaceous glandக்கு sex hormone adapt ஆகுதோ அப்போ pimples போயே போகிடும்...

Finally what is the கருத்து of the story is,sight ah கம்மி பண்ணு...pimples வராது....அம்புட்டுதேன்...🙏🙏🙏