மன அழுத்தம் எப்டி நம்ம உடம்புக்கு நோய் நிலைகளை உண்டக்குது?
மன அழுத்தத்துல இருக்கும் போது நம்மளோட உடம்புல cortisol,adrenaline இது போல hormone ங்களோட சுரப்பு இருக்கும்..
இது பொதுவா ரொம்ப பயம் இருக்கும்போதோ,ஒரு நாய் நம்மள தொரத்தும் போதோ அவங்ககிட்ட ஒருந்து காப்பாத்திக்க தொல பொல தொல பொலன்னு ஓடுறதுக்கு ஒரு அசுர வேகத்த குடுக்குறத்துக்கு காரணமே அந்த hormones தான்...
இப்டி பட்ட ஹார்மோன்..நம்ம உடம்புல அடிக்கடி சரந்து நம்ம இரத்தத்துல கலந்து ,நோய் எதிர்ப்பு சக்திய தர செல்கள செயலிலக்க செய்றதுனால,மன அழுத்ததுல இருக்கவங்க அதிகமான நோய்க்கு உள்ளாகுறாங்க...
பரம்பரையாகவோ,நோய் தொற்றின் காரணமாகவோ,சுய செல்களை அழிக்கும் காரணிகளாலோ,சுத்தமான சுற்றுசூழல் இல்லாத காரணத்தினாலோ,ஊட்டச்சத்து குறைவுபாடினாலோ,இல்லை உணவே கிடைக்காத்தாலோ...உண்டான நோய்களெல்லாம் மன அழுத்தம் என்ற காரணத்தினாலேயும் உண்டாகின்றன...
சோ அண்ட் சோ ,மனச அமைதியா வச்சுக்கோங்க...(நீ என்னம்ம ஈசியா சொல்லிபுட்டன்னு சொல்லாதிங்க)
முடிஞ்ச அளவு,சைட்டுகளை சைட்டுகளோடு நிப்பாட்டி விட்டு காதலுக்கு கொண்டு செல்லாமலும்,டீச்சர் திட்டுனத வகுப்பறைலயே விட்டுட்டு வந்தும்,புருஷன் பொண்டாட்டி சந்தேகத்துக்கு இடமில்லாம நடந்துகிட்டாலும்,நீங்கள் நினைப்பதாகவே அடுத்தவர்கள் இருக்க வேண்டும் என்று நினையாமலும்,கொஞ்ச கற்பனா சக்தியை அடக்கி கொண்டாலும்
சரியான நேரத்துல சாப்ட்டு,மொபைல் நோண்டாம நேரத்துக்கு தூக்கம்,யோகா,தியானம் போன்றவைகளினால் ஓரளவுக்கு மன அழுத்ததிலிருந்து விடைபெறலாம்..




No comments:
Post a Comment